ஐசிசி தொடர்கள் எப்போதும் ஸ்பெஷலானது - ஷர்துல் தாக்கூர்!

Updated: Wed, Jun 07 2023 11:33 IST
Shardul Thakur Terms WTC Final 'Once-in-a-lifetime Moment'! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவதா அல்லது 4 வேகப்பந்துவீச்சாளர், ஒரு ஸ்பின்னருடன் களமிறங்குவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இங்கிலாந்தில் சம்மர் சீசன் என்றாலு, 20 டிகிரிக்கு மேல் வெயில் இருக்க வாய்ப்பே இல்லை. இதனால் பலரும் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூருடன் களமிறங்குவதே சரி என்று கருத்து கூறி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக இங்கிலாந்து வானிலை சீராக இருப்பதால், அஸ்வின் களமிறங்குவதே சிறந்தது என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் பேசுகையில், “ஐசிசி தொடர்கள் எப்போதும் ஸ்பெஷலானது. நினைத்த நேரங்களில், நினைத்த இடங்களில் ஐசிசி தொடர்களில் விளையாட முடியாது. அதிலும் என்னைப் போன்ற ஒரு வீரருக்கு, ஐசிசி தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைப்பது மறக்க முடியாத தருணமாகும்.

இந்தப் போட்டியில் விளையாடுவதே வாழ்நாள் தருணமாக அமைந்துள்ளது. 100 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் இருந்து 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு நாட்டுக்காக விளையாடுவது நல்ல உணர்வை கொடுக்கிறது. இங்கிலாந்து வானிலையை கணிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், எப்போது மழை பெய்யும், எப்போது வெயில் அடிக்கும் என்றே தெரியாது. அதனால் இங்கிலாந்து வானிலையை நம்பப் போவதில்லை.

ஏனென்றால் வெயில் அடிக்கும் போது பேட்டிங்கிற்கும், மேகமூட்டம் வரும் போது பவுலிங்கிற்கும் சாதகமாக இருக்கும். அந்த நேரத்தில் ஸ்விங்காகும் பந்துகள் பேட்ஸ்மேன்களை திணற செய்யும். அதனால் இந்தப் போட்டியில் டாஸை வெல்வது முக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை