IND vs ENG : இந்திய அணியில் பிரித்வி, சூர்யா சேர்ப்பு!

Updated: Mon, Jul 26 2021 14:47 IST
Image Source: Google

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கிலாந்தில் முகாமிட்டு இருக்கிறது. இதில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதன் விளைவாக, அவர்கள் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். 

இதன் காரணமாக அவர்களை விடுவித்து கூடுதல் வீரர்களை சேர்த்து பிசிசிஐ புதிய அணியை அறிவித்துள்ளது. இதில் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கே), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல். ராகுல், சாஹா, அபிமன்யூ ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை