இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மனம் திறந்த ஷிகர் தவான்!

Updated: Thu, Dec 29 2022 12:50 IST
Shikhar Dhawan Deletes Emotional Post Days After White Ball Snub from Team India! (Image Source: Google)

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டனாக இருந்த ஷிகர் தவான் தற்போது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்கு காரணம் அவருடைய மோசமான பார்ம் தான். வங்கதேசத்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் தோல்வியை தழுவியது. இதில் ஷிகர் தவான் மூன்று போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 18 ரன்கள் தான் அடித்தார். அந்த தொடரில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசினார்.

மேலும் தமக்கு கிடைத்த வாய்ப்பை தொடக்க வீரராக சுப்மான் கில் கெட்டியாக பிடித்துக் கொண்டார். நடப்பாண்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் சுப்மான் கில் படைத்தார். இதனால் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷிகர் தவான் இனி இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் நடப்பாண்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ஷிகர் தவான் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தாம் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஷிகர் தவான் முதல்முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பஞ்சாப் மொழியில் எழுதியுள்ள தவான், “விளையாட்டு என்பது வெற்றி மற்றும் தோல்விக்காக இல்லை. இது அனைத்தும் நம்முடைய தைரியத்தை பொறுத்தது. தொடர்ந்து கடினமாக உழையுங்கள். மற்றதை கடவுள் கையில் விட்டு விடுங்கள். கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று பதிவிட்டு இருந்தார்.

எனினும் அந்தப் பதிவை போட்ட சில மணி நேரத்தில் ஷிகர் தவான் அதனை டெலிட் செய்து விட்டார். இந்திய அணியின் தொடக்க வீரராக இடம் பிடிக்க சுப்மான் கில், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா, கே எல் ராகுல், ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் காத்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வரும் மூன்றாம் தேதி தொடங்குகிறது அது முடிந்தவுடன் ஒரு நாள் போட்டி வரும் பத்தாம் தேதி நடைபெறுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை