ஐபிஎல் 2023: இமாலய சிக்சரை பறக்கவிட்ட தூபே; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் 24ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதி வருகின்றன. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளஸிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல் டெவன் கான்வேவும், ருத்துராஜ் கெய்க்வாட்டும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் முக்கிய வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ் வீசிய அவரது இரண்டாவது ஓவரில், வெறும் 3 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய சிவம் துபே, டெவன் கான்வேவுடன் கூட்டணி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு புறம் டெவன் கான்வேவும், மறுபுறம் சிவம் துபேவும் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து, மளமளவென ரன் குவித்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக சிவம் துபே, ஹர்ஷல் பட்டேலின் பந்துவீச்சில் 111 மீட்டர் தூரத்திற்கு இமாலய சிக்ஸர் விளாசி மாஸ் காட்டியதோடு, 25 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதில் டெவான் கான்வே 83 ரன்களையும், ஷிவம் தூபே 52 ரன்களையும் குவித்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர்.
ஷிவம் துபேவின் இமாலய சிக்ஸரைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குவித்துள்ளது. இந்நிலையில் ஷிவம் தூபே விளாசிய இமாலய சிக்சர் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.