அண்டர் 19 அணியின் ஆலோசகராக சந்தர்பால் நியமனம்!

Updated: Sun, Nov 14 2021 08:32 IST
Image Source: Google

அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தங்கள் அணிகளை தீவிரமாக தயார்ப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணியும் தங்கள் அணியை தயார்படுத்தும் வகையில், அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலை நியமித்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 164 டெஸ்ட், 268 ஒருநாள், 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சந்தர்பால், 20ஆயிரத்திற்கு அதிகமான ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: T20 World Cup 2021

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணியின் தலைமை பயிற்சியாளராக பிளாய்டு ரீபர், துணை பயிற்சியாளராக ரோகன் நர்ஸ், பந்துவீச்சு பயிற்சியாளராக அம்புரோஸ் ஆகியோரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை