IND vs ENG: விசா பிரச்சனையில் சோயப் பஷீர்; விரக்தியை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ்!

Updated: Wed, Jan 24 2024 12:21 IST
IND vs ENG: விசா பிரச்சனையில் சோயப் பஷீர்; விரக்தியை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜன.25) முதல் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஹைதராபாத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி அனுபம் வாய்ந்த ஜாக் லீச், ரெஹான் அஹ்மத் ஆகியோருடன், அறிமுக வீரர்களான சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி ஆகியோரையும் தேர்வு செய்தது. இதில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அறிமுக வீரர் சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஏனெனில் அவர் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இந்நிலையில் சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் அறிமுக வீரர் சோயப் பஷீருக்கு விசா கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் கடந்த டிசம்பர் மாதமே எங்களது அணியை அறிவித்தோம். அப்போதும் இந்தியா வருவதற்கு சோயப் பஷீருக்கு விசா இல்லாமல் தவித்து வருகிறார். அந்த இளம் வீரருக்கு இது விரக்தியான சூழ்நிலை. இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருப்பது எப்படி இருக்கும் என்ற அவரது முதல் அனுபவமாக இதுபோன்ற சூழ்நிலையை நான் விரும்பவில்லை. அவருக்காக நான் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை