IND vs ENG: விசா பிரச்சனையிலிருந்து மீண்ட சோயப் பஷீர்!

Updated: Wed, Jan 24 2024 20:42 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜன.25) முதல் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஹைதராபாத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி அனுபம் வாய்ந்த ஜாக் லீச், ரெஹான் அஹ்மத் ஆகியோருடன், அறிமுக வீரர்களான சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி ஆகியோரையும் தேர்வு செய்தது. இதில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அறிமுக வீரர் சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் அவர் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். 

இந்நிலையில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய சோயப் பஷீர் இங்கிலாந்துக்கு திரும்பியதாக தகவல் வெளியானது. மேலும் சோயப் பஷீருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டத்தால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் சில காட்டமான கருத்துகளை தெரிவித்திருந்தார். 

 

இதையடுத்து தற்போது சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், “இந்த பிரச்சனை முடிவடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சோயப் பஷீருக்கு விசா கிடைத்துவிட்டது, அவர் இந்த வார இறுதிக்குள் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து விடுவார்” என்று தெரிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை