ENG vs IND: இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் சோயப் பசீர்!
Shoaib Bashir Ruled Out: ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது
இதனால் முன்னிலை ஏதுமின்றி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 192 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் 22 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஜூலை 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீர் காயம் காரணமாக விலகியுள்ளார். லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது ஷோயப் பஷீர் கேட்ச் பிடிக்கும் முயற்சியில் காயத்தை சந்தித்தார்.
அதன்பின் அவர் உடனடியாக பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், அவரது இதுகை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக அவர் மீண்டும் களத்திற்கு திரும்பாமல் இருந்தார். மேலும் இக்கிலாந்து அணியின் இரண்டவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தருணத்திலும் அவர் வலியுடன் காணப்பட்டார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் அணியின் தேவையைக் கருத்தில்க்கொண்டு சில ஓவர்களையும் வீசியதுடன் முக்கியமான விக்கெட்டையும் வீழ்த்தி அணியின் வெற்றியில் உதவினார்.
Also Read: LIVE Cricket Score
இந்நிலையில் அவரது காயம் குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் என்பதால் இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து சோயப் பஷீர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாம் ஹார்ட்லி அல்லது வேறு யாரேனும் சுழற்பந்து வீச்சாளர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.