விராட் கோலி பதவி விலகல்; முன்னாள் வீரர்கள் வாழ்த்து!
இந்திய வீரர் விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று மாலை அறிவித்தார். ஏற்கனவே அவர் டி20, ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பிசிசிஐ - விராட் கோலிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி ஆகிய காரணங்களே விராட் கோலியின் விலகளுக்கு காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் கூறியதாவது’விராட் கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட முடிவாகும். அந்த முடிவை பிசிசிஐ மதிக்கிறது.
எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர் ஒரு சிறந்த வீரர்’ என்று தெரிவித்தார்.
Koo AppMany Congratulations #ViratKohli on an outstanding career as India’s Test Captain. Stats don’t lie & he was not only the most successful Indian Test Captain but one of the most successful in the world. Can be very proud of what you have achievedfir the team and the game & looking forward to watch you dominate many years with the bat.- Virender Sehwag (@VirenderSehwag) 15 Jan 2022
மேலும் வீரேந்திர சேவாக், “இந்திய டெஸ்ட் கேப்டனாக விராட்கோலி சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துகள். புள்ளிவிவரங்கள் பொய் சொல்லவில்லை & அவர் மிகவும் வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டன் மட்டுமல்ல, உலகின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். அணி மற்றும் ஆட்டத்தில் நீங்கள் சாதித்ததைப் பற்றி மிகவும் பெருமைப்படலாம் மற்றும் பல ஆண்டுகளாக நீங்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.