ரோஹித், சேவாக் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Mon, May 05 2025 14:40 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 91 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், இறுதிவரை போராடிய ஆயூஷ் பதோனி 74 ரன்களையும், அப்துல் சமத் 45 ரன்களையும் சேர்த்த நிலையிலும், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்ததுடன், ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா, விரேந்திர சேவாக் ஆகியோரின் சாதனையையும் முறியடித்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு இந்த போட்டியின் மூலம் மகேந்திர சிங் தோனியின் சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் சமன்செய்தும் அசத்தியுள்ளார். 

அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயார் 45 ரன்கள் எடுத்ததன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 400 ரன்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், ஒரு சீசனில் கேப்டனாக அதிக எண்ணிக்கையில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார், வீரேந்தர் சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை முந்தியுள்ளதுடன், மகேந்திர சிங் தோனியின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை 6 ஐபிஎல் சீசன்களில் கேப்டனாக செயல்பட்டு அதில் 4 முறை 400+ ரன்களைச் சேர்த்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக மகேந்திர் சிங் தோனி 16 ஐபிஎல் சீசன்களில் 4 முறை மட்டுமே இதனைச் செய்துள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அவருடைய சாதனையை சமன்செய்து அசத்தியுளார். மேலும் கேஎல் ராகுல், கௌதம் கம்பீர் உள்ளிட்டோரும் தலா 4 முறை இந்த சாதனையைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் வீரேந்தர் சேவாக் மற்றும் ரோஹித் சர்மாவைப் பற்றிப் பேசினால், சேவாக் கேப்டனாக 5 ஐபிஎல் சீசன்களில் செயல்பட்ட நிலையில் அதில் 3 முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்தார். மறுபாக்கம் ரோஹித் சர்மா 11 ஐபிஎல் சீசன்களில் கேப்டனாக இருந்த நிலையிலும் அதில் அவர் 3 முறை மட்டுமே 400+ ரன்களை எடுத்துள்ளார். இந்த பட்டியாலில் ஆர்சிபி அணியின் மூன்னாள் கேப்டன் விராட் கோலி 12 சீசன்களில் 7 முறை 400+ ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக முறை 400+ ரன்கள் எடுத்த கேப்டன் (மொத்த சீசன்கள்)

  • 7 முறை – விராட் கோலி (12 சீசன்கள்)
  • 5 முறை – டேவிட் வார்னர் (7 சீசன்கள்)
  • 4 முறை* – ஷ்ரேயாஸ் ஐயர் (6 சீசன்கள்)
  • 4 முறை – கே.எல். ராகுல் (5 சீசன்கள்)
  • 4 முறை – கௌதம் கம்பீர் (10 சீசன்கள்)

இதுதவிர்த்து இப்போட்டியில் பஞ்சப் கிங்ஸ் அணி 200+ ரன்கள் என்ற இலக்கை வெற்றிகாரமாக பாதுகாத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு கேப்டனாக 200+ ரன்களை வெற்றிகரமாக அதிக முறை பாதுகாத்த வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியின் கீழ் அணி 14 போட்டிகளில் 10 முறை 200 ரன்களுக்கு மேல் என்ற இலக்கை வெற்றிகரமாக தக்கவைத்துள்ளது.

இதன் மூலம், ரோஹித் சர்மாவின் சிறப்பு சாதனையை அவர் சமன் செய்துள்ளார், ரோஹித் சர்மா தலைமையிலான அணி 10இல் 10 முறையும் 200 ரன்களுக்கு மேல் என்ற இலக்கை பாதுகாத்ததுடன், இந்த பட்டியளில் மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் சமன்செய்து அசத்தியுள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் மகேந்திர சிங் தோனி உள்ளார், அவரது தலைமையின் கீழ் 20 போட்டிகளில் 17 முறை 200க்கு மேற்பட்ட ரன்களை பாதுகாத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

ஐபிஎல் வரலாற்றில் ஒரு கேப்டனாக 200+ ரன்களை வெற்றிகரமாக பாதுகாத்தவர்கள்

  • 17 முறை – எம்.எஸ். தோனி (20 போட்டிகள்)
  • 13 முறை – விராட் கோலி (16 போட்டிகள்)
  • 10 முறை* – ஷ்ரேயாஸ் ஐயர் (14 போட்டிகள்)
  • 10 முறை – ரோஹித் சர்மா (10 போட்டிகள்)
  • 8 முறை – டேவிட் வார்னர் (8 போட்டிகள்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை