ஐபிஎல் 2025: சாதனைகளை குவித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்பட்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட்நாயகன் விருதை வென்றார். இந்த ஆட்டத்தில் அவர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் என 230 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 97 ரன்களைச் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். இந்த போட்டியில் அவர் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை தவறவிட்டாலும், ஒரு பேட்டராகவும் கேப்டனாகவும் சில சிறப்பு சாதனைகளைப் படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள்
அதன்படி இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களைக் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய 6ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார். இதுதவிர்த்து அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாவும் 2000 ரன்களைப் பூர்த்தி செய்துள்லார். இதுதவிர்த்து இப்போட்டியில் 9 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அவர் தன்னுடைய 250 சிக்ஸர்களையும் விளாசியும் அசத்தியுள்ளார்.
தோனியை சமன் செய்தார்
மேற்கொண்டு இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றதன் மூலம், 70 போட்டிகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த கேப்டன்கள் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அவர் பெறும் 41ஆவது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியளில் ரோஹித் சர்மா 43 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
கேப்டனாக அதிக வெற்றிகள் (70 போட்டிகளில்)
- 43: ரோஹித் சர்மா
- 41: ஷ்ரேயாஸ் ஐயர்
- 41. எம்.எஸ். தோனி
- 37. விராட் கோலி
- 37: கௌதம் கம்பீர்
- 35: டேவிட் வார்னர்
இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்தபஞ்சாப் கிங்ஸ் அணியானது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஃபினிஷர் ஷஷாங்க் சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 243 ரன்களைக் குவித்தது. இதில் அதிக பட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்களையும், ஷஷாங்க் சிங் 44 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் 74 ரன்களையும், ஜோஸ் பட்லர் 54 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 46 ரன்களையும் சேத்தும் கூட அந்த அணி 20 ஓவர்களில் 232 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராட் டைட்டன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.