ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ஷுப்மன் கில் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் இந்தியாவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரோஹித் சர்மாவுடன் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

Advertisement

ஆனால் 16 பந்துகளை எதிர்கொண்ட அவரும் 4 ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு மற்றுமொரு சறுக்கலை கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதை விட அவர் அவுட்டான விதம் தான் ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த 2017இல் அறிமுகமான அவர் எப்போதுமே சுழல் பந்து வீச்சாளர்களை பாரமாக எதிர்கொண்டு வருகிறார். ஆனாலும் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக எதிர்கொள்ள தடுமாறிய அவர் கேட்ச் கொடுத்து அவுட்டாவதை வழக்கமாக வைத்திருந்தார். 

 

இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் என்றாலே தரமான ஷார்ட் பிட்ச் பந்தை போட்டால் விக்கெட்டை கொடுத்து விடுவார் என்பது உலக அணிகளுக்கு அம்பலமானது. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக 2022இல் நடைபெற்ற 5ஆவது டெஸ்ட் போட்டியில் பால்கனியில் அமர்ந்து கொண்டே பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியினருக்கு ஷார்ட் பிட்ச் போடுமாறு சொல்லி ஸ்ரேயாஸ் ஐயரை அவுட்டாக்கியதை மறக்கவே முடியாது.

ஆனால் அதன் பின் காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் நியூலிலாந்து எதிரான கடந்த போட்டியில் ஷார்ட் பிட்ச் பந்தில் அவுட்டானதை போலவே இப்போட்டியில் கிறிஸ் ஓக்ஸ் விரித்த வலையில் கேட்ச் கொடுத்து அதே பழைய பஞ்சாங்க சொதப்பலை அரங்கேற்றியுள்ளது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News