இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த சில மாதங்களாகவே தற்போது முறையான பயிற்சி எடுத்து வருகிறார். 

Advertisement

இலங்கை தொடரில் விளையாட முடியாத அவர் தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் இணைய இருக்கிறார். செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியுடன் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்ததும் மிகப்பெரிய இரண்டு தொடர்களை அவர் சந்திக்க இருக்கிறார். ஒன்று ஐபிஎல் தொடர் அதனைத் தொடர்ந்து உலக கோப்பை டி20 தொடர் இந்த இரண்டு தொடர்களிலும் அவர் அணியில் முக்கிய வீரராக திகழ்வார். 

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாகவே தான் கடினமாக பயிற்சி செய்து வருவதாகவும், இந்த ஓய்வு நாட்களில் கூட தான் பயிற்சியை மட்டுமே மேற்கொண்டதாகவும் விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு இது சரியான வாய்ப்பு. காயத்திற்கு பிறகு நான் இப்போது திரும்பி வந்து ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் விளையாட உள்ளேன். இந்த இரண்டு மிகப்பெரிய தொடர்களும் ஒரு கிரிக்கெட்டராக எனக்கு மிகவும் முக்கியம். எப்போதுமே நாம் வெற்றி பெறும் அணியில் இருக்க வேண்டும் என்ற கனவு நம் அனைவரிடமும் இருக்கும். அந்த வகையில் தற்போது கடந்த நான்கு மாதங்களாக நான் என்னுடைய மனநிலையை ஒருநிலைப்படுத்தி கடினமாக உழைத்து வருகிறேன்.

நிச்சயம் என்னுடைய பயிற்சி எனக்கு வெற்றியை தரும். எதிர்வரும் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் எனது அணியின் வெற்றிக்காக நான் முக்கிய பங்களிப்பை தருவேன். அது மட்டுமே தற்போது என்னுடைய இலக்காக இருக்கிறது. அதுவரை நான் ஓய்வு எடுப்பது என்ற பேச்சுக்கே இடம்கொடுக்க மாட்டேன். அதேபோன்று என்னுடைய இடத்தை பிடிக்க வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் யாருடனும் என்னை ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாகவே என்னுடைய ஆட்டம் சிறப்பாக அமைந்து இருக்கிறது. அதனை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறேன். நிச்சயம் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை இனிவரும் தொடர்களில் கொண்டு வந்து நான் சார்ந்திருக்கும் அணிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும். இது மட்டுமே என்னுடைய தற்போதைய மன நிலையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News