102 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் காணொளி!

Updated: Mon, Feb 24 2025 10:51 IST
Image Source: Google

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஃபார்மில் உள்ளார். நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் கூடா அபார ஆட்டத்தை வெளிப்பாடுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், விராட் கோலியுடன் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 

இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த இமாலய சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தில் ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 31ஆவது ஓவரை பாகிஸ்தான் அணியின் சல்மான் ஆக வீசிய நிலையில், அந்த ஓவரை ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்டார். 

அப்போது அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் இறங்கி வந்து மிட் விக்கெட் திசையில் இமால சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார். அவர் அடித்த அந்த சிக்ஸரானது 102 மீட்டர் தூரம் சென்றது. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த இந்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

அதன்படி விளையாடிய அந்த அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. இதில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில் 46 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்னிலும், ஹர்திக் பாண்டிய 8 ரன்னிலும் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி சதமடித்து அசத்தியதுடன் 100 ரன்களச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதனையடுத்து இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை