மருத்துவமனைக்கு விரைந்த ஸ்ரேயாஸ் ஐயர்; காரணம் என்ன?

Updated: Sun, Mar 12 2023 11:26 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்த நிலையில் தற்போது இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விக்கெட் கீப்பர் கே எஸ் பரத் களத்திற்கு வந்தார். அப்போது தான் தெரிந்தது ஸ்ரேயாஸ்க்கு திடீரென்று முதுகு விலா பகுதியில் வலி ஏற்பட்டதால் அவர் நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தான் திரும்பினார். தற்போது மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. மேலும் இது காயத்தால் ஏற்பட்ட வழியாக இருக்காது என்று கூறப்படுகிறது.

சிறுநீரக கற்கள் ஏற்பட்டு அதனால் வலி தாங்க முடியாமல் ஸ்ரேயாஸ் ஐயர் துடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யவே தற்போது ஸ்ரேயாஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்டு ஸ்ரேயாஸ் களத்துக்கு வருவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி 113 ஒவர் முடிவில் 319 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் எடுத்து விளையாடி வருகிறது.

தற்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 161 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்திய அணி இன்று மட்டும் 300 ஆண்கள் அடித்து விட்டால் ஆஸ்திரேலியா 150 ரன்கள் பின்தங்கிய நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை விளையாடும். இதனால் இந்திய அணிக்கு  வெற்றி வாய்ப்பு இருக்கும் என ரசிகர்கள் நம்பும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் ஒட்டுமொத்தமாகவே பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை