IND vs BAN, 1st Test: டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ஷுப்மன் கில்!
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று தொடங்கியது. அதன்படி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் தேவையற்ற சாதனை ஒன்றை படைத்தார். அதன்படி இப்போட்டியில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய ஷுப்மன் கில், ஹசன் மஹ்மூத் வீசிய மோசமான பந்தில் மோசமான ஷாட்டை விளையாடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதிலும் குறிப்பாக அவர் இப்போட்டியில் 8 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தார்.
இதன்மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கி, ஒரு ஆண்டில் அதிக முறை டக அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு முறை டக் அவுட்டான ஷுப்மன் கில், தற்போது மூன்றாவது முறையாக டக் அவுட்டாகி இந்த மோசமான சாதனைடைப் படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்கசர்க்ர் கடந்த 1979ஆம் ஆடு இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறை டக் அவுட்டாகி இருந்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனைத் தற்போது ஷுப்மன் கில் சமன்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனெவே ஒருநாள், டி20 போட்டிகளில் சொதப்பி வரும் ஷுப்மன் கில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சொதப்பியது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.