ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சைமன் டௌலின் உருக்கமான ட்வீட்!

Updated: Thu, May 06 2021 12:16 IST
Image Source: Google

கரோனா வைரஸின் 2ஆவது அலை காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 29 லீக் போட்டிகள் மட்டும் நடைபெற்றிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனால் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். 

இந்நிலையில் வர்ணனையாளராக பணியாற்றிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் டௌல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவரது பதிவில், அன்புள்ள இந்திய மக்களே, நீங்கள் பல ஆண்டுகளாக எனக்கு கொடுத்த அன்பிற்கு நன்றி கடன் பட்டுள்ளேன். ஆனால் இதுபோன்ற கடினமான காலங்களில் உங்களை விட்டு எங்கள் நாட்டிற்கு திரும்புவது வருத்தமளிக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் உங்களால் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

சைமன் டௌலின் இப்பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::