ஷுப்மன் கில்லின் பேட்டிங்கை விமர்சித்த சௌமன் டௌல்!

Updated: Mon, May 08 2023 22:33 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில் லக்னோவை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 8ஆவது வெற்றியை பதிவு செய்து தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்ததுடன், கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிக் செய்த குஜராத் அணியில் ஷிப்மன் கில் 94 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

வெயிலில் நடைபெற்ற அந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில் கடைசி வரை விளையாடியதால் சோர்வடைந்த அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார். இந்நிலையில் அது போன்ற சமயங்களில் ரிட்டையர்ட் ஹர்ட் விதிமுறையை பயன்படுத்தி சுப்மன் கில் பெவிலியனுக்கு சென்று அடுத்ததாக காத்திருக்கும் ராகுல் திவேத்திய போன்ற அதிரடி வீரருக்கு வழி விட்டிருக்க வேண்டுமென முன்னாள் வீரர் சைமன் டௌல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சைமன் டௌல், “இந்த போட்டியில் ஷுப்மன் மிகவும் சோர்வடைந்தார். குறிப்பாக கடைசி நேரத்தில் தம்மால் முடிந்த பவுண்டரிகளை அடிக்க முடியாமல் அவர் தடுமாறினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் சொல்வது உங்களுக்கு சர்ச்சையாக தோன்றும். ஆனால் பகல் வேளையில் நடைபெற்ற அந்த போட்டியில் 45 பந்துகளில் 75 அல்லது 85 ரன்களை எடுத்த நீங்கள் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தொடர்ந்து விளையாட முடியாது என்பதால் “சரி இனிமேல் ராகுல் திவேத்தியா விளையாடட்டும்” என்ற எண்ணத்துடன் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி சென்றிருக்க வேண்டும்.

குறிப்பாக கிரிக்கெட்டில் சாதனைகள் முக்கியமல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். இருப்பினும் சதம் என்பது பெரியது என்று அனைவரும் சொல்வார்கள் என்பதையும் நான் அறிவேன். ஆம் சதம் என்பது நீங்கள் வெல்லும் போது மிகவும் பெரியது தான். ஆனால் தோற்கும் போது உபயோகமில்லாதது. எனவே இந்த நவீன கிரிக்கெட்டில் இவரைப் போன்ற இளம் வீரர்கள் சோர்வடைந்ததும் பவுண்டரிகளை அடிக்க முடியாத சமயத்தில் அடுத்த வீரர்களுக்கு வழி விட வேண்டும். உங்களது வீரர்கள் வங்கியில் அதிரடியாக விளையாடுபவர் இருக்கும் போது ஏன் அதை அணியின் நலனுக்காக செய்யக்கூடாது” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை