கடந்த மூன்று ஆண்டுகளில் என்னை நான் மாற்றிக்கொண்டேன் - ஹர்ஷல் படேல்!

Updated: Mon, Sep 27 2021 13:54 IST
Image Source: Google

துபையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கோலி 51, மேக்ஸ்வெல் 56, பரத் 32 ரன்கள் எடுத்தார்கள். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு விளையாடிய மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அவர் 4 விக்கெட்டுகளை எடுத்ததால் 18.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது.

இந்நிலையில், ஹாட்ரிக் அனுபவம், உலகக் கோப்பைக்குத் தேர்வாகாதது பற்றி 30 வயது ஹர்ஷல் படேல் கூறுகையில், “டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகாதது என் கையில் இல்லை. எந்த அணிக்கு விளையாடினாலும் நேர்மறையாகத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என எண்ணுவேன். பள்ளிகளில் விளையாடிய கிரிக்கெட் ஆட்டங்களில் கூட நான் ஹாட்ரிக் எடுத்ததில்லை. 

ஐபிஎல் போட்டியில் ஆறு முறை ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்முறையாக ஹாட்ரிக் கிடைத்துள்ளது. புள்ளிகள் பட்டியலை நாங்கள் பார்க்கவில்லை. அதைப் பார்த்தால் உங்கள் செயல்முறையிலிருந்து கவனம் திசைதிரும்பும். ஷார்ஜாவில் நான் மெதுவான பந்துகளை வீசினேன். 

அபுதாபியில் 80 விழுக்காடு பந்துகளை வேகமாகவே வீசினேன். நிலைமைக்கேற்றவாறு பந்துவீச முயல்வேன். ஏமாற்றுதல் முறையில் பொலார்டின் விக்கெட்டை வீழ்த்தினேன். வைடாகப் பந்துவீசி பிறகு யார்க்கர் வீசினால் அவர் அதைத் தவறவிடுவார் என அணியின் கூட்டத்தில் விவாதித்தோம். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஆட்டத்தில் யார்க்கர் பந்தை வீசுவதை விடவும் அதை மெதுவாக வீச முயற்சி செய்தேன். அதேபோல அந்தப் பந்தை பொலார்ட் தவறவிட்டுவிட்டார். சிலர் மிகத் தாமதமாக கவனத்துக்கு வருவார்கள். நான் அவர்களில் ஒருவன். கடந்த மூன்று வருடங்களில் எனக்குத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை