SL vs WI, 2nd Test: இலங்கையை சாய்த பெருமாள்; விண்டீஸ் அபாரம்!
இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை பதும் நிஷங்கா 61 ரன்களுடனும், ஒஷாதா ஃபெர்னாண்டோ 2 ரன்களுடனும் நாளைய போட்டியை தொடங்கினர். இதில் ஃபெர்னாண்டோ 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மறுமுனையிலிருந்த நிஷங்காவும் 73 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் வீராசாமி பெருமாளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் இலங்கை அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வீராசாமி பெருமாள் 5 விக்கெட்டுகளையும், வாரிக்கன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களைச் சேர்த்துள்ளது.
விண்டீஸ் அணியில் பிராத்வெயிட் 22 ரன்களுடனும், பொன்னர் ஒரு ரன்னுடம் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.