இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
- நேரம் - மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக அறியப்படுகிறது. இங்கு பந்துவீச்சாளர்கள் பிட்சியிலிருந்து திருப்பம் மற்றும் பிடியைப் பெற உதவுகிறது. இதனை பயன்படுத்தி பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டார் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறலாம். மேலும் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.
நேரலை
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட் டென் 5 சேனலில் நேரலையில் காணலாம். அதேசமயம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 12
- இலங்கை - 07
- ஆஃப்கானிஸ்தான் - 04
- முடிவில்லை - 01
உத்தேச லெவன்
இலங்கை: குசல் மெண்டிஸ், பதும் நிஷங்க, சரித் அசலங்கா, சதீர சமரவிக்ரமா, ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீரா, அகில தனஞ்சய, பிரமோத் மதுஷன்
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அஹ்மது, நவீத் ஸத்ரான்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரஹ்மனுல்லா குர்பாஸ்
- பேட்டர்ஸ்: ரஹ்மத் ஷா, சரித் அசலங்கா, இப்ராஹிம் ஸத்ரான்
- ஆல்-ரவுண்டர்கள்: முகமது நபி (துணை கேப்டன்), குல்பதீன் நைப், வநிந்து ஹசரங்கா (கேப்டன்), அஸ்மதுல்லா ஒமர்சாய்
- பந்து வீச்சாளர்கள்: மஹீஷ் தீக்ஷனா
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.