இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Feb 13 2024 13:51 IST
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளதால், நிச்சயம் ஆறுதல் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
  • நேரம் - மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை 

இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட் டென் 5 சேனலில் நேரலையில் காணலாம். அதேசமயம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 14
  • இலங்கை - 09
  • ஆஃப்கானிஸ்தான் - 04
  • முடிவில்லை - 01

பிட்ச் ரிப்போர்ட்

பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக அறியப்படுகிறது. இங்கு பந்துவீச்சாளர்கள் பிட்சியிலிருந்து திருப்பம் மற்றும் பிடியைப் பெற உதவுகிறது. இதனை பயன்படுத்தி பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டார் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறலாம். மேலும் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

உத்தேச லெவன்

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), முகமது நபி, இக்ராம் அலிகில், குல்பதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நூர் அஹ்மத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கைஸ் அஹ்மத்.

இலங்கை: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்கா, அசிதா ஃபெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம(துணைக்கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ்: பதும் நிஷங்கா, இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா
  • ஆல்-ரவுண்டர்கள்: முகமது நபி, வநிந்து ஹசரங்கா, அஸ்மதுல்லா ஒமர்சாய்(கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள்: ஃபசலக்ஹக் ஃபரூக்கி, பிரமோத் மதுஷன்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை