இலங்கை vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Sri Lanka vs Bangladesh 3rd ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 08) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது பல்லகலேவில் உள்ள பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL vs BAN 3rd ODI Match Details
- மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
- இடம் - பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லகலே
- நேரம்- ஜூன் 08, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)
Pallekele International Cricket Stadium, Pallekele Pitch Report
இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான இப்போட்டி பல்லகலேவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 47 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 17 முறையும், முதலில் பந்துவீசிய அணி 27 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 244 ரன்களாக உள்ள நிலையில் இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 381 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
SL vs BAN ODI Head To Head Record
- மொத்தம் - 59
- இலங்கை - 43
- வங்கதேசம் - 13
- டிரா - 02
SL vs BAN 3rd ODI Dream11 Team
- விக்கெட் கீப்பர்கள் - ஜக்கார் அலி, குசல் மெண்டிஸ்
- பேட்ஸ்மேன்கள் - பர்வேஸ் ஹொசைன் எமன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), பதும் நிஷங்கா (துணை கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - வநிந்து ஹசரங்கா, சரித் அசலங்கா, மெஹிதி ஹசன் மிராஸ்
- பந்துவீச்சாளர்கள் - தஸ்கின் அஹ்மத், தன்விர் இஸ்லாம், அசித்தா ஃபெர்னாண்டோ
SL vs BAN Predicted Playing 11
Sri Lanka Probable XI : பதும் நிசங்க, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியானகே, மிலன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் திக்ஷனா, இஷான் மலிங்க, அசித்த ஃபெர்னாண்டோ.
Bangladesh Probable XI : பர்வேஸ் ஹொசைன் எமன், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), ஜேக்கர் அலி, தன்சிம் ஹசன் சாகிப், தன்வீர் இஸ்லாம், முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்
SL vs BAN 3rd ODI Dream11 Prediction, SL vs BAN Dream11 Team, SL vs BAN ODI Series, Fantasy Cricket Tips, SL vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka vs Bangladesh
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.