ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

Updated: Fri, Sep 12 2025 19:41 IST
Image Source: Cricketnmore

BAN vs SL Match 5Cricket Tips:  டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

அந்தவகையில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்  பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே ஹாங்காங் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் இலங்கை அணி சமீபத்தில் தான் ஜிம்பாப்வே டி20 தொடரை வென்று ஆசிய கோப்பையில் விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

BAN vs SL: Match Details

மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்,
இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
நேரம்- செப்டம்பர் 13, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

BAN vs SL: Live Streaming Details

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம், அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

BAN vs SL: Head-to-Head in T20Is

  • Total Matches: 20
  • Bangladesh: 8
  • Sri Lanka: 12
  • No Result: 0

BAN vs SL: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷேக் சாயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 92 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 50 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 50 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 136 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 225  ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BAN vs SL: Possible XIs

Bangladesh: பர்வேஸ் ஹொசைன் எமோன், டான்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ்(கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்

Sri Lanka: சரித் அசலங்கா (கேப்டன்), குசல் மெண்டிஸ், பதும் நிஷங்க, குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, மஹீஸ் தீக்ஷன, நுவன் துஷார

BAN vs SL: Player to Watch Out For

Probable Best Batter: Litton Das (Bangladesh)

வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் கடந்த நான்கு டி20 போட்டிகளில் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். அதனால் இந்த ஆட்டத்தில் லிட்டன் தாஸ் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Probable Best Bowler: Dushmantha Chameera (Sri Lanka)

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர கடந்த போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதால் இந்த ஆட்டத்திலும் அதனை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Today Match Prediction: வங்கதேசம் ஏற்கனவே இங்கு ஒரு ஆட்டத்தை விளையாட உள்ளது, மேலும் அவர்கள் நிலைமைகளை அறிந்திருக்கிறார்கள். அது அவர்களுக்கு சாதகமாக வேலை செய்யும், மேலும் இந்த ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

BAN vs SL Match 5 Prediction Asia Cup 2025, BAN vs SL Pitch Report, Today Match BAN vs SL, BAN vs SL Prediction, BAN vs SL Predicted XIs, Cricket Tips, BAN vs SL Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh vs Sri Lanka

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை