SL vs IND: தீவிர பயிற்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா!

Updated: Wed, Jul 31 2024 22:23 IST
SL vs IND: தீவிர பயிற்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா!
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.  

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதையடுத்து இப்புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீரா சமர்விக்ரமா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலாகே, சாமிகா கருணாரத்ன, மஹீஷ் திக்ஷனா, அகிலா தனஞ்செயா, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரானா, அசிதா ஃபெர்னாண்டோ.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 02 - கொழும்பு
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 04 - கொழும்பு
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 07 - கொழும்பு
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை