எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் -  கேரி ஸ்டெட்!

Updated: Wed, Sep 25 2024 22:10 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இதையடுத்து அணிகளுக்கும் இடையேயான இரானடாவது டெஸ்ட் போட்டியானது நாளை (செப்.26) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணியானது கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடி போட்டியில் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.

மேலும் இப்போட்டியின் வெற்றி தோல்வி வைத்தே தொடரின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  இதனையடுத்து இப்போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அரிவித்துள்ளது. மறுபக்கம் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்கள் நடைபெறும் என்று கணிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என அந்த அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பெரும்பாலும், இது மிகவும் சமமான போட்டியாக இருந்தது, சிறிய தருணங்கள் கூட விளையாட்டின் போக்கை மொத்தமா மாற்றியது. மேலும் இங்குள்ள சூழல் நியூசிலாந்திற்கு முற்றிலும் வேறுபட்டவை. இதனால் நாங்கள் இந்த சூழலிற்கு ஏற்றவாறு எங்களை தயார்செய்துகொள்ள் வேண்டும். 

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டில் நாங்கள் முழு கவனத்தை செலுத்தி விளையாடுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் எங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் தற்போது ஆபத்தில் உள்ளன. அதனால் நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து உத்தேச லெவன்: டாம் லாதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதீ (கே), அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க். 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை