இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. 

Advertisement

அதன்படி இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கமுன்ஹுகாம்வே - கிரேக் எர்வின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் எர்வின் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கமுன்ஹுகம்வே ஒரு பவுண்டரி, 2 சிச்கர்கள் என 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா ஒருமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் 14 ரன்களுக்கும், ரியான் பர்ல் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா அரைசதம் கடந்ததுடன், 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இறுதியில் பிரையன் பென்னெட் 10 ரன்களையும், லுக் ஜோங்க்வா 13 ரன்களையும் எடுத்தனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்ன இணைந்த குசால் மெண்டிஸ், குசால் பெரேரா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இருவரும் தலா 17 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஒருமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் சரித் அசலங்கா 16 ரன்களிலும், கேப்டன் வநிந்து ஹசரங்கா ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏஞ்சலோ மேத்யூஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிச்கர் என 46 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இறுதியில் தசுன் ஷனகா - துஷ்மந்தா சமீரா இணை அதிரடியாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதில் தசுன் ஷனகா 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் இலக்கை எட்டி இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News