இலங்கை vs ஜிம்பாப்வே, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Jan 15 2024 21:47 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் போராடி வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் இலங்கை அணியை ஜிம்பாப்வே அணி தடுமாறவைத்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஜிம்பாப்வே
  • இடம் - ஆர்.பிரமதோசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
  • நேரம் - மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

பிரேமாதாச கிரிக்கெட் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்பகிறது. இதனால் பேட்டர்கள் இந்த மைதானத்தில் சோபிப்பது கடிமான ஒன்றாக இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

நேரலை 

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இத்தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் ஃபேன் கோட் ஓடிடி தளத்திலும் இத்தொடரை காணலாம்.

நேருக்கு நேர்

  •  மோதிய போட்டிகள் - 04
  • இலங்கை - 04
  • ஜிம்பாப்வே - 0

உத்தேச லெவன்

இலங்கை: பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா(கே), மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, நுவன் துஷார.

நியூசிலாந்து: கிரேக் எர்வின், டினாஷே கமுன்ஹுகாம்வே, பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா(கே), ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ங்காரவா, பிளெசிங் முசரபானி

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ்
  • பேட்டர்ஸ்: கிரேக் எர்வின், குசால் பெரேரா, சரித் அசலங்கா,மில்டன் ஷும்பா
  • ஆல்ரவுண்டர்கள்: சிக்கந்தர் ரஸா (கேப்டன்), வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்), ரியான் பார்ல்
  • பந்துவீச்சாளர்கள்: மஹீஷ் தீக்‌ஷனா, பிளஸ்ஸிங் முசரபானி,துஷ்மந்தா சமீரா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை