தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக சாதனை படைத்த வியான் முல்டர்!

Updated: Sun, Jul 06 2025 19:48 IST
Image Source: Google

Wiaan Mulder Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் சதமடித்து அசத்தியுள்ளார். 

ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 6) புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி - லெசெகோ செனோக்வானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வியான் முல்டர் சதமடித்து அசத்தினார். அதன்பின்னரும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இரட்டை சதத்தை நோக்கி விளையடி வருகிரார். இந்நிலையில் இப்போட்டியில் வியான் முல்டர் சதமடித்ததன் மூலம் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை முல்டர் பெற்றுள்ளார். அவருக்கு முன் இரண்டு வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். அந்தவகையில் கடந்த 1913 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஹெர்பி டெய்லர் (109 நாட் அவுட்) மற்றும் கடந்த 1955 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஜாக்கி மெக்லூ (104 நாட் அவுட்) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்கள்

  • 109 – ஹெர்பி டெய்லர் vs இங்கிலாந்து, டர்பன் (1913)
  • 104* – ஜாக்கி மெக்லூ vs இங்கிலாந்து, மான்செஸ்டர் (1955)
  • 100* – வியான் முல்டர் vs ஜிம்பாப்வே, புலவாயோ (2025)*

இப்போட்டிக்கு முன்னதாக அந்த அணியின் கேப்டன் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் தற்காலிக கேப்டன் பொறுப்பு வியான் முல்டருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் கேப்டனான முதல் போட்டியிலேயே சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். முன்னதாக அவர் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டோனி டி ஸோர்ஸி, லெசெகோ செனோக்வானே, வியான் முல்டர்(கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் பிரீவிஸ், கைல் வெர்ரைன், செனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், ப்ரீனெலன் சுப்ரயன், கோடி யூசுஃப்

Also Read: LIVE Cricket Score

ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்: தியான் மேயர்ஸ், டகுட்ஸ்வானாஷே கைடானோ, நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரெய்க் எர்வின்(கேப்டன்), வெஸ்லி மதேவெரே, தஃபட்ஸ்வா சிகா, வெலிங்டன் மசகட்சா, குண்டாய் மாடிகிமு, பிளெஸிங் முசரபானி, தனகா சிவாங்கா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை