England vs India 2nd Test Dream11 Prediction: இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இதையடுத்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 02) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

ENG vs IND 2nd Test Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
  • இடம் -  எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம், பர்மிங்ஹாம்
  • நேரம்- ஜூலை 02, மதியம் 3.30 மணி (இந்திய நேரப்படி)

Edgbaston, Birmingham Pitch Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 60 டெஸ்ட் சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 19 முறையும், முதலில் பந்துவீசிய அணி 23 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 302 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 157 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 710 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENG vs IND Test Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 137
  • இங்கிலாந்து- 52
  • இந்தியா- 35
  • முடிவில்லை - 50
Advertisement

ENG vs IND 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், ஜேமி ஸ்மித்
  • பேட்ஸ்மேன்கள் - ஜோ ரூட் (கேப்டன்), கேஎல் ராகுல், பென் டக்கெட் (துணை கேப்டன்), ஒல்லி போப், ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர் - பென் ஸ்டோக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, கிறிஸ் வோக்ஸ்.

ENG vs IND Predicted Playing 11

England Playing XI : ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

Advertisement

India Probable XI : கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா/ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா/ அர்ஷ்தீப் சிங்.

ENG vs IND 2nd Test Dream11 Prediction, ENG vs IND Dream11 Team, ENG vs IND Test Series, Fantasy Cricket Tips, ENG vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England vs India

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News