SF vs SEAMatch 22 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் முதல் இடத்தில் உள்ளதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. அதேசமயம் சியாட்டில் ஆர்காஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே சியாட்டில் ஆர்காஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

SF vs SEA: Match Details

  • மோதும் அணிகள்- சீயாட்டில் ஆர்காஸ் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
  • இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூலை 01, காலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

SF vs SEA: Live Streaming Details

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SF vs SEA: Head-to-Head in MLC

  • Total Matches: 4
  • Seattle Orcas: 1
  • San Francisco Unicorns: 3
  • No Result: 0

SF vs SEA: Ground Pitch Report

ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 154 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 245 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SEA vs SF: Possible XIs

Seattle Orcas: ஷயான் ஜஹாங்கீர், ஜோஷ் பிரௌன், ஆரோன் ஜோன்ஸ், கைல் மேயர்ஸ், ஹென்ரிச் கிளாசென், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், வக்கார் சலாம்கெயில், அயன் தேசாய்

Advertisement

San Francisco Unicorns: மேத்யூ ஷார்ட் (கேப்டன்), ஃபின் ஆலன், ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹசன் கான், ரொமாரியோ ஷெப்பர்ட், சேவியர் பார்ட்லெட், ஜஹ்மர் ஹாமில்டன், ஹாரிஸ் ரவுஃப், பிராடி கோச், லியாம் பிளங்கெட்

SEA vs SF: Dream11 Team

  • Wicket-keepers: ஹென்ரிச் கிளாசென், ஃபின் ஆலன்
  • Batters: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஷிம்ரான் ஹெட்மையர்
  • All-rounders: ஹசன் கான், மேத்யூ ஷார்ட் (captain), கைல் மேயர்ஸ் (vice captain), சிக்கந்தர் ரஸா, ரோமாரியோ ஷெஃபெர்ட்
  • Bowlers: ஹாரிஸ் ராவுஃப், ஜஸ்தீப் சிங்

SEA vs SF Match 22 Dream11 Prediction, SEA vs SF Dream11 Prediction, Today Match SEA vs SF, SEA vs SF Prediction, SEA vs SF Dream11 Team, Fantasy Cricket Tips, SEA vs SF Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Seattle Orcas vs San Francisco Unicorns MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News