இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் & டி20 தொடரை நடத்தும் இலங்கை?

Updated: Fri, Jul 18 2025 22:57 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து இரண்டு போட்டியிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மூன்றாம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுவதாக இருந்தது. மேலும் இத்தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடாங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையில் பாதுகாப்பு காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பதால் இரு அணிகளுக்கும் இது பற்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் இந்திய அணி தரப்பில் இருந்து இதுவரை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்றதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை பிசிசிஐ இதற்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அறிவிப்பும் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தொடருக்கு ஐசிசி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் போட்டிகள் அனைத்து கொழும்பு மற்றும் கண்டியில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. முதலில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடத்தப்படும் என்ற கூறப்பட்ட நிலையில், எதிர்வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இரு அணிகளுக்கும் இடையேயான டி20 முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

முன்னதாக இலங்கை அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்திருந்தது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் வங்கதேச அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வென்றுள்ளது. இதனால் எதிவரும் போட்டிகளில் இலங்கை அணியின் செயல்பாடு குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை