வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!

Updated: Wed, Oct 08 2025 22:31 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏ.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி ஏற்கெனவ அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன், தென் ஆப்பிரிக்க அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்றதுடனும் இப்போட்டியில் விளையாடவுள்ளன. இத்னால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதனப்டி, ஸ்மிருதி மந்தனா 2025 ஆம் ஆண்டில் 16 இன்னிங்ஸ்களில் 959 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் மேலும் 41 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு வருடத்தில் 1,000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார்.

தற்போது, ​​ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க், மகளிர் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த சாதனையைப் படைத்துள்ளார்.  அவர் கடந்த 1997ஆம் ஆண்டு விளையாடிய 16 ஒருநாள் போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட்டிங் செய்து 3 சதங்களுடன், 80.83 என்ற சாராசரியில் 970 ரன்களைக் குவித்ததே இதுநாள் வரையிலும் சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள்

  • பெலிண்டா கிளார்க் (ஆஸ்திரேலியா) 1997 இல் 970 ரன்கள்
  • ஸ்மிருதி மந்தனா (இந்தியா) 2025 இல் 959 ரன்கள்
  • லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா) 2022 இல் 882 ரன்கள்
  • டெபி ஹாக்லி (நியூசிலாந்து) 1997 இல் 880 ரன்கள்
  • எமி சாட்டர்த்வைட் (நியூசிலாந்து) 2016 இல் 853 ரன்கள்
  • பெலிண்டா கிளார்க் (ஆஸ்திரேலியா) 2000 இல் 842 ரன்கள்
  • நாட் ஸ்கைவர்-பிரண்ட் (இங்கிலாந்து) 2022 இல் 833 ரன்கள்
  • கிளேர் டெய்லர் (இங்கிலாந்து) 2005 இல் 807 ரன்கள்
Also Read: LIVE Cricket Score

இதுதவிர, மகளிர் ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை வேகமாக எட்டிய வீராங்கனை என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பையும் மந்தனா பெற்றுள்ளர். அவர் இதுவரை 110 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 4,919 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் அவர் 81 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்த இந்த சாதனையை படைப்பார். தற்போது, ​​மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை வேகமாக எட்டிய சாதனையை ஸ்டஃபானி டெய்லர் வைத்துள்ளார். அவர் 129 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை