தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் - மொயீன் அலி

Updated: Thu, Jul 14 2022 16:49 IST
Sometimes You Learn More From Losing Games: Moeen Ali (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸில் இன்று நடைபெறுகிறது. 

இதற்கிடையில் இயோன் மோர்கன் ஓய்வு பெற்று விட்டதால் அவர் இடத்துக்கு மொயீன் அலி வந்துள்ளார். இந்நிலையில் ஓவல் தோல்வி பற்றி பேசிய மொயீன் அலி , “பயிற்சியாளர் மேத்யூ மொட் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறார். தோல்வி அவரை பாதித்ததாகவே தெரியவில்லை.

சில தோல்விகள் நல்லதுதான், ஒரு ரியாலிட்டி செக்காக இருக்கும். கடந்த காலங்களில் நிறைய வென்றோம், உலகக்கோப்பையை வென்றோம் பிறகு சில தோல்விகளைச் சந்தித்தோம். இது முன்னேறிச் செல்ல நல்லதுதான். உலகக்கோப்பை வரும் தருணத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம். எங்களுக்குத் தேவை வெற்றி, ஆனால் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை.

சில வேளைகளில் தோற்கும் போட்டிகளிலிருந்துதான் அதிகம் கற்றுக் கொள்ள முடியும். அன்று கஷ்டமாக இருந்தது. ஷாட்களை ஆடப்போனோம், 26 ரன்களுக்கு 5 விக்கெட், இப்படி எல்லா போட்டியிலும் நடக்காது. பொதுவாக நன்றாக ஆடவில்லை எனில் 70/5 என்று வேண்டுமானால் இருக்கலாம். பந்து புதியது, இந்திய பந்து வீச்சு அபாரம், எதிர்த்தாக்குதல்தான் சிறந்தது ஆனால் கடினமானது.

டி20யாக இருந்தாலும் அடுத்தடுத்து போட்டிகளுக்கு பயணிப்பதும் கடினம்தான். இது எல்லா அணிகளுக்குமே கடினம்தான்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை