ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த லீக் போட்டியில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேப்டன் சோஃபி டிவைனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 57 ரன்களையும், ஜார்ஜியா பிளிம்மர் 34 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 

Advertisement

இதைத்தொடர்ந்து, 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் சோஃபி டிவைன், “இந்த அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் இதுபோன்ற வெற்றியைப் பெறுவதற்கு நாங்கள் ஒரு அணியாக ஒன்றிணைத்தது செய்ல்படுவதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் நீண்ட காலமாக இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று குறிக்கோளுடன் இத்தொடரில் விளையாடி வருகிறோம். 

அந்தவகையில் இத்தொட்ரின் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பான தொடக்கத்தைப் பெற்று அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தோம். இதன்மூலம் பந்துவீச்சாளர்கள் மேல் அழுத்தத்தை உருவக்க முயற்சித்தோம். முதலில் நாங்கள் இப்போட்டியில் 150 ரன்களை தான் எட்டுவோம் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக 10 ரன்களைச் சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News