ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!

Updated: Thu, Jun 29 2023 23:38 IST
Sourav Ganguly has his say on Ajinkya Rahane's re-appointment as a Vice-captain in Test cricket! (Image Source: Google)

இந்திய அணி வருகிற ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலவதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

டெஸ்ட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்பில் ரோஹித் சர்மா மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்பில் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அஜிங்கியா ரஹானே 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

அதன்பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் எடுக்கப்படாமல் இருந்தார். இந்த வருட டொமஸ்டிக் சீசன் மற்றும் ஐபிஎல் சீசன் இவருக்கு சிறப்பாக அமைந்ததால் மீண்டும் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டு, உலக டெஸ்ட் சாம்பியன் பைனலில் விளையாட வைக்கப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சரிவர விளையடாமல் ஆட்டமிழந்தபோதும், முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் அடித்தார். இரண்டு இன்னிங்ஸிலும் இவரது பேட்டிங் தனியாக தெரிந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணியில் எடுக்கப்பட்டதோடு, துணைகேப்டன் பொறுப்பிலும் ரஹானே நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரை துணைகேப்டன் பொறுப்பில் நியமித்ததற்காக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ரஹானே டெஸ்ட் துணை கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டது முட்டாள்தனம். சரியான முடிவல்ல என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் கௌரவம் கங்குலி பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இதுபோன்ற வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் இளம் வீரர்களை துணைகேப்டனாக அமர்த்தி வளர்க்க வேண்டும். எதிர்கால இந்திய அணிக்கு இதுதான் உகந்தது. ஆனால் மீண்டும் ரஹானேவை நியமித்தது முட்டாள்தனம். எந்த வகையிலும் இதில் லாஜிக் இல்லை. கிட்டத்தட்ட 18 மாதங்கள் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த ஒருவர் நன்றாக விளையாடினால் அடுத்த டெஸ்டில் வாய்ப்பு கொடுப்பது சரி. 

ஆனால் மீண்டும் துணை கேப்டன் பொறுப்பு கொடுத்திருப்பது சரியல்ல. அப்படியே சீனியர் வீரர்களை நியமிக்க வேண்டும் என்றிருந்தாலும், அணியில் ஜடேஜா இருக்கிறார். அவருக்கு தான் சென்றிருக்க வேண்டும். தேர்வுக்குழுவினர் எந்த மனநிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பதே புரியவில்லை” என்று கங்குலி சாடியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை