WI vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்கா 357 ரன்களில் ஆல் அவுட; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டமானது கைவிடப்பட்டது.
பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை முழுமையாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸி 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 78 ரன்களையும் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்களையும் சேர்த்த நிலையில் விகெட்டை இழந்து பெவிலியன் திரும்ப்னர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டா நாள் ஆட்டநேர முடிவில் 8 விகெட் இழப்பிற்கு 344 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை வியான் முல்டர் 37 ரன்களுடனும், காகிசோ ரபாடா 12 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர்.
இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா 21 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லுங்கி இங்கிடி ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 357 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வியான் முல்டர் 41 ரன்களைச் சேர்த்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வாரிகன் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், கீமார் ரோச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேய்க் பிராத்வைட் - மைக்கைல் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கைல் லூயிஸ் 35 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை இழந்து 53 ரன்களைச் சேர்த்துள்ளது. இதீல் கிரேய்க் பிராத்வைட் 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மஹாராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.