SA vs IND, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Mon, Jan 17 2022 15:04 IST
Image Source: Google

SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இதில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தொடரை இழந்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19ஆம் தேதி பார்லில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - போலண்ட் பார்க், பார்ல்
  • நேரம் - மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் ஒருநாள் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் என பேட்டிங்கிலும், பும்ரா, சஹால், அஸ்வின் ஆகியோர் பந்துவீச்சிலும் அணிக்கு வலு சேர்க்கின்றனர். 

ஏற்கெனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதால் நிச்சயம் அதற்கான செயல்பாட்டை களத்தில் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பேட்டிங், பவுலிங் என வலிமையான அணியாக திகழ்கிறது. 

அதற்கேற்றார் போல் பேட்டிங்கில் டி காக், ஐடன் மார்க்ரம், வெண்டர் டுசென், ஜென்மேன் மாலன் ஆகியோரும், பந்துவீச்சில் காகிசோ ரபடா, மார்கோ ஜான்சன், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோரும் இருப்பது இந்திய அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 84
  • இந்தியா வெற்றி - 35
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 46
  • முடிவில்லை - 3

உத்தேச அணி

தென் ஆப்பிரிக்கா - ஜன்னெமன் மலான், ஐடன் மார்க்ரம், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், குயின்டன் டி காக், டுவைன் பிரிட்டோரியஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.

இந்தியா - ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்/ ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - கேஎல் ராகுல், விராட் கோலி, ஜான்மேன் மலான், ரஸ்ஸி வான் டெர்-டுசென்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை