SA vs IND, 2nd Test: போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Jan 01 2022 16:23 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. 

இதில் கடந்த 26ஆம் தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜஹன்னெஸ்பர்க்கில் வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
  • இடம் - வாண்டரர்ஸ் மைதானம், ஜஹன்னெஸ்பர்க்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி செஞ்சூரியனில் பெற்ற வெற்றியின் மூலம் புது உத்வேகத்தைக் கொண்டுள்ளது. மேலும் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

இருந்தாலும் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது ஏமாற்றமளித்துள்ளது. அதனால் அடுத்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இருப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் அஸ்வின், பும்ரா, ஷமி, சிராஜ் என அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டின் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் பெரிதளவில் சோபிக்க தவறியது. குறிப்பாக அணியின் பேட்டிங் வரிசை இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இருக்கிறது. 

மேலும் தற்போது டி காக் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதும் அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

ஆனால் பந்துவீச்சில் இங்கிடி, ரபாடா, வியான் முல்டர் இருப்பது சற்று ஆறுதலளிக்கும் விடயமாகப் பார்க்கப்படுகிறது. 

மேலும் இப்போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பண்மடங்கு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள்-40
  • தென் ஆப்பிரிக்க வெற்றி - 15
  • இந்தியா வெற்றி - 11
  • முடிவில்லை - 10

உத்தேச அணி
தென் ஆப்பிரிக்கா -
டீன் எல்கர் (கே), ஐடன் மக்ரம், கீகன் பீட்டர்சன், ராஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரைன்/ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

இந்தியா - கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - கேஎல் ராகுல், டெம்பா பவுமா, டீன் எல்கர், மயங்க் அகர்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர்
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஜஸ்பிரிட் பும்ரா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை