ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.  அந்த வகையில் ஐபிஎல் தொடரின் மேகா ஏலமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

அதேசமயம், இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தொகையாக ரூ.120 கோடி ஒதுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. முன்னதாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு ஏலத்தொகையின் உச்சவரம்பாக ரூ.100 கோடி மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரிடென்ஷன் விதிகளிலும் சில மாற்றங்கள் செய்வதற்கு அணிகளிடம் ஆலோசனை கேட்கபட்டது.

Advertisement

இதில் ஒரு சில அணிகள் ரிடென்ஷன் முறையில் 8 வீரர்களை தேர்வு செய்யவும், சில அணிகள் 5 முதல் 7 வீரர்களை தேர்வு செய்யவும், சில அணிகள் அனைத்து வீரர்களும் ஏல முறையில் மட்டுமே வாங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் 8 வீரர்களை ரீடென் செய்யவும், 8 வீரர்களை ஆர்டிஎம் முறையில் வாங்க வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடிய ஒரு அணி ஒரு வீரரை மட்டுமே ரீடென் செய்ய வேண்டும் மற்றும் ஒரு வீரரை மட்டும் ஆர்டிஎம் முறையில் வாங்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணிக்காக சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் ஏழு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவர்களில் இந்திய வீரர்கள், உள்ளூர் வீரர்கள், சர்வதேச வீரர்கள் என எந்த கட்டுப்பாடும் இருக்க கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி, ஏலத்தின் போது வீரர்களை தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக வீரர்களுடன் ஆலோசிக்க ஐபிஎல் அணிகளை அனுமதிக்க வேண்டும் என்றும், அதெபோல் ஐபிஎல் ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்படும் வீரர் அதன்பின் சரியான காரணம் இல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால் அந்த வீரரை ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடைசெய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அவர் அக்கூட்டத்தில் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News