ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் அதிரடி; எஸ்.ஆர்.எச்-க்கு 150 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Apr 14 2021 21:55 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 11 (13) ரன்களிலும், ஷபாஸ் அகமது 14 (10) ரன்களிலும் ஆட்டமிந்தனர்.

அணியின் தூண்களான விராட் கோலி 33 (29) ரன்னிலும், டிவில்லியர்ஸ் 1(5) ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கடைசிநேரத்தில் அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் சற்று அதிரடி காட்டியதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 (41) ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை