Sunrisers Hyderabad vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவதாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SRH vs RR: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - இரவு 7.30 மணி

SRH vs RR: Pitch Report

Advertisement

பொதுவாக,  சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோர்கள் குவிக்க கூடிய மைதானங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. மேலும் இப்போட்டியானது இரவில் நடைபெறவுள்ளதால் நிச்சயம் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SRH vs RR: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 19
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 10
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 09

SRH vs RR: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Sunrisers Hyderabad vs Rajasthan Royals Predicted Teams

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்

ராஜஸ்தான் ராயல்ஸ்: டாம் கோஹ்லர்-காட்மோர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

SRH vs RR: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்ரவுண்டர்கள்: ரவி அஸ்வின், ரியான் பராக், நிதிஷ் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள்: டி நடராஜன், சந்தீப் சர்மா

SRH vs RR Dream11 Prediction, Today Match Prediction, Today Match SRH vs RR, SRH vs RR Dream11 Team, SRH vs RR Head-to-Head Record, Fantasy Cricket Tips, SRH vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sunrisers Hyderabad vs Rajasthan Royals

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News