ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Apr 01 2023 20:49 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது. இதில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி நாளை நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரசைர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. 

மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியானது ஹைதராபாத்திலுள்ளா ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை சென்றும் கோப்பையை கைப்பற்ற முடியாமல் வெறுங்கையோடு திரும்பியது. அதன் காரணமாக நடப்பாண்டு இன்னும் வலிமையாக செல்லும் வகையில் ஷிம்ரான் ஹெட்மையர், ஜோ ரூட், டிரெண்ட் போல்ட், ஜேசன் ஹோல்டர் ஆகியோரை ஐபிஎல் ஏலத்தி வாங்கியுள்ளது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் டாப் ஆர்டரிலும், ரியான் பராக், ஹெட்மயர், ஜேசன் ஆகியோரு பினிஷிங்கிலும் உள்ளனர். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், டிரெண்ட் போல்ட்,  நவ்தீப் சைனி, ஆடம் ஸாம்பா என வெரைட்டி டி20 ஸ்பெஷலிஸ்டுகளைக் கொண்டுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அந்த அணியின் வலிமையாக கம்பேக் கொடுக்க காத்திருக்கிறது. அதன் காரணமாக அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேலும் மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ஹென்ரிச் கிளாசென் என டி20 நட்சத்திரங்களையும் ஏலத்தில் எடுத்துள்ளது. 

இருப்பினும் மார்க்ரம், ஜான்சன், கிளாசென் ஆகியோர் நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருவதால் அவர்களால் இப்போட்டியில் விளையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் அணியின் பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஹாரி ப்ரூக், கிளென் பிலீப்ஸ், அப்துல் சமத் என அதிரடி வீரர்கள் வரிசைக்கட்டி நிக்கின்றனர். 

பந்துவீச்சு துறையில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் கடந்தாண்டு தனது அசுர வேகத்தால் எதிரணி பேட்டர்களை நிலை குழையச்செய்த உம்ரான் மாலிக்கும் இருப்பது எதிரணி பேட்டர்களுக்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக உள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 16
  • ராஜஸ்தான் ராயல்ஸ் -08
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 08

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி/பசல்ஹாக் ஃபரூக்கி

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் , சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ் - ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், தேவ்தத் படிக்கல்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர்
  • பந்துவீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, ஹாரி புரூக்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை