இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தன் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது இன்று தொடங்கியது. கொழும்புவிலூள்ள சிங்கள விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - நூர் அலி ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமாளித்தார். அதன்பின் களமிறங்கிய ரஹ்மத் ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான நூர் அலி 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 17 ரன்களிலும், நசிர் ஜமால் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மத் ஷா 91 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இக்ரம் அலிகில், கைஸ் அஹ்மத், ரெஹ்மான், நிஜாத் மசூத், சலீம் சஃபி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 198 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், அஸிதா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி அசத்தினர். 

இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு நிஷன் மதுஷ்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் நிஷன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். இதையடுத்து 118 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News