SL vs WI, 1st T20I: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ராஜபக்ஷாவுக்கு வாய்ப்பு!

Updated: Sun, Oct 13 2024 08:57 IST
Image Source: Google

 வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி  இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது அக்டோபர் 13ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது அக்டோபர் 20ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இலங்கை அணியோ இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பிறகு எதிர்கொள்ளும் முதல் டி20 தொடர் இதுவாகும்.

இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில் ஓராண்டுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ள பானுகா ராஜபக்ஷாவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு குசல் மெண்டிஸுடன் இணைந்து பதும் நிஷங்கா தொடக்க வீரராக விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு குசல் பெரேரா 3வது இடத்தில் விளையாடுவார். சிறப்பான பார்மில் இருக்கும் கமிந்து மெண்டிஸ் 4ஆவது இடத்தில் விளையாடுவார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் பனுகா ராஜபக்ஷா மற்றும் சரித் அசலங்கா ஆகியோர் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த அணியில் வனிந்து ஹசரங்கா மற்றும் மகேஷ் திக்ஷன ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சமிந்து விக்கிரமசிங்கா, மதிஷா பத்திரனா மற்றும் அஷித ஃபெர்னாண்டோ ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அணியில் துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வண்டர்சே, தினேஷ் சண்டிமால், நுவான் துஷாரா ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இலங்கை அணியின் பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), பானுக ராஜபக்சே, வனிந்து ஹசரங்க, சமிந்து விக்ரமசிங்க, மஹிஷ் திக்ஷனா, மதிஷா பத்திரனா, அசித்த ஃபெர்னாண்டோ.

இலங்கை டி20 அணி: சரித் அசலங்க (கே), பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க ஃபெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, நுவான் துஷார, மதீஷ பதிரானா, பினுர ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ.

Also Read: Funding To Save Test Cricket

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மேன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலன், அலிக் அதானாஸ், ஆண்ட்ரே பிளெட்சர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அல்ஸாரி ஜோசப், ஷாய் ஹோப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை