வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ராஜபக்ஷா!

Updated: Wed, Oct 09 2024 20:21 IST
Image Source: Google

இலங்கை அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 13ஆம் தேதி முதல் டி20 தொடரும், அக்டோபர் 20ஆம் தேதி முதல் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.

மேலும் இதில் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் தம்புளாவிலும், ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் கண்டியிலும் நடைபெறவுள்ளது. முன்னதாக இலங்கை அணி சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்வதால் ரசிகர்களின் எதிபார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

அதன்படி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி டி20 அணியின் கேப்டனாக ரோவ்மன் பாவெலும், ஒருநாள் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த அணியில் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், அகீல் ஹொசைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இடம்பெறவில்லை. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில், முன்னாள் கேப்டன் தசுன் ஷனகா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம் பனுகா ராஜபக்ஷா மீண்டும் இலங்கை டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். 

இவர்களைத் தவிர்த்து பேட்டர்கள் பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, கமிந்து மண்டிஸ், தினேஷ் சண்டிமால் உள்ளிடோரும், பந்துவீச்சில் மதீஷா பதிரானா, மஹீஷ் தீக்ஷனா, வநிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வண்டர்சே, நுவான் துஷான், ஃபினுரா ஃபெர்னாண்டோ உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இலங்கை டி20 அணி: சரித் அசலங்க (கே), பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க ஃபெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, நுவான் துஷார, மதீஷ பதிரானா, பினுர ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மேன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலன், அலிக் அதானாஸ், ஆண்ட்ரே பிளெட்சர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அல்ஸாரி ஜோசப், ஷாய் ஹோப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்.

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர் அட்டவணை

Also Read: Funding To Save Test Cricket

டி20 தொடர்

  • முதல் டி20, தம்புல்லா, அக்டோபர் 13
  • 2ஆவது டி20, தம்புல்லா, அக்டோபர் 15
  • 3ஆவது டி20, தம்புல்லா, அக்டோபர் 17
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை