ENG vs SL, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் அணியின் துணைக்கேப்டனாகவும் ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் திமுத் கருணரத்னே, நிஷன் மதுஷ்கா, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா, அதிரா சமரவிக்ரமா, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, ரமேஷ் மெண்டிஸ், ஜெஃப்ரி வண்டர்சே உள்ளிட்ட வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த அணியில் பதும் நிஷங்கா மற்றும் ஜெஃப்ரி வண்டர்சேவுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
இலங்கை பிளேயிங் லெவன்: நிஷன் மதுஷ்கா, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, அசிதா ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வுட், சோயிப் பஷீர்.