நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Updated: Wed, Dec 18 2024 20:42 IST
Image Source: Google

இலங்கை அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயன டி20 தொடரானது டிசம்பர் 28ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது அடுத்தமாதம் ஜனவரி 05ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. 

மேலும் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் அனுபவ மற்றும் இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில், பேட்டிங்கில் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சண்டிமால் ஆகியோருடன் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பனுகா ராஜபக்ஷா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

பந்துவீச்சை பொறுத்தவரையில் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வண்டர்சேன், மதீஷா பதிரனா ஆகியோருடன் நுவான் துஷாரா, அசித்த ஃபெர்னாண்டோ, பினுரா ஃபெர்னாண்டோ உள்ளிட்டோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த டி20 அணியில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் துனித் வெல்லாலகேவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இலங்கை டி20 அணி: சரித் அசலங்க (கே), பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க அபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வான்டர்சே, சமிது விக்கிரமசிங்க, மதீஷ பத்திரன, நுவான் துஷார, அசித்த ஃபெர்னாண்டோ, பினுர ஃபெர்னாண்டோ

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை