ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தோடரில் விளையாடவுள்ளது.

Advertisement

இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • நேரம் - மாலை 3 மணி
  • இடம்- ஆர். பிரமதாச மைதானம்

போட்டி முன்னோட்டம்

இந்திய அணி

விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Advertisement

இந்திய அணியின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்க, ருதுராஜ் கெய்க் வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், மனீஷ் பாண்டே என பல அதிரடி வீரர்கள் இருப்பது அணியின் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் என பல வேரியேஷன்களைக் கொண்டுள்ள பந்துவீச்சாளர் நிச்சயம் எதிரணி வீரர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 

மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேதன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் ராணா என பலர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளதால் இவர்களின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகரிடத்தில் அதிகரித்துள்ளது.

Advertisement

இலங்கை அணி

கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை அணி அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் பெரும் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் அணியில் நிலையான கேப்டன் என யாரும் செயல்படாமல் இருந்துவருகின்றனர். 

இந்திய அணியுடனான தொடரிலும் கூட இலங்கை அணி தசுன் ஷானகா தலைமையில் விளையாடவுள்ளது. மேலும் இங்கிலாந்து தொடரின் போது பயோ பபுள் விதியை மீறிய அனுபவ வீரர்கள் குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, குணத்திலக ஆகியோர் இத்தொடரிலும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

Advertisement

அதுமட்டுமில்லாம காயம் காரணமாக முன்னாள் கேப்டன் குசால் பெரேரா, பினுரா ஃபெர்னாண்டோ ஆகியோரும் விலகியுள்ளது அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழக்க செய்துள்ளது. 

மேலும் இத்தொடரில் விளையாடும் பல வீரர்கள் இதுநாள் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதும் இல்லை. இதனால் வலிமை வாய்ந்த இந்திய அணியிடம் இவர்களின் பாட்சா செல்லுமா என்பது கேள்விகுறி தான்.

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 159
  • இலங்கை வெற்றி - 56
  • இந்தியா வெற்றி - 91
  • முடிவில்லை - 12
Advertisement

உத்தேச அணி

இலங்கை - பாதும் நிசங்கா, மினோத் பானுகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, தாசுன் ஷானகா (கே), சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சாமிரா, அசிதா ஃபெர்னாண்டோ.

இந்தியா - ஷிகர் தவான்(கே), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், தாசுன் ஷானகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ
  • ஆல்ரவுண்டர்கள் - ஹார்திக் பாண்டியா, வாணிந்து ஹசரங்கா, தனஞ்சய டி சில்வா
  • பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், லக்ஷன் சண்டகன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News