SL vs SA, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Sep 01 2021 18:03 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள பிரமதசா மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs தென் ஆப்பிரிக்க
  • இடம் - பிரமதசா மைதானம், கொழும்பு
  • நேரம் - பிற்பகல் 3 மணி

போட்டி முன்னோட்டம்

தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி கடந்தமாதம் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்ற முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. 

மேலும் இத்தொடருக்கான இலங்கை அணியில் அனுபவ வீரர்களான குசால் பெரேரா, தினேஷ் சண்டிமல் ஆகியோர் இடம்பிடித்திருந்த அணியின் பலத்தை கூட்டியுள்ளது. மேலும் பந்துவீச்சில் வாநிந்து ஹசரங்கா, துஷ்மந்த சமீரா ஆகியோரும் இருப்பதால், நிச்சயம் இத்தொடரில் இலங்கை மிகப்பெரும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் ஜென்மேன் மாலன், ஐடன் மார்கரம், வென்டெர் டூசன் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங் அசத்தி வருகின்றனர். பந்துவீச்சில் ககிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஷம்ஸி ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் தொடரை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 77
  • இலங்கை வெற்றி - 33
  • தென் ஆப்பிரிக்க வெற்றி -44
  • முடிவில்லை - 2

உத்தேச அணி
இலங்கை -
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசுல் பெரேரா, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, தினேஷ் சண்டிமல், தசுன் ஷனகா (கே), சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீரா, நுவான் பிரதீப்.

தென் ஆப்பிரிக்கா - ஜென்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், டெம்பா பாவுமா (கே), ரஸ்ஸி வான்டெர் டூசன், கைல் வெர்ரெய்ன், ஹென்ரிச் கிளாசென், ஆண்டிலே பெஹ்லுக்வயோ, கேசவ் மகராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி, ககிசோ ரபாடா.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் சண்டிமல், குசால் பெரேரா
  • பேட்ஸ்மேன்கள் - தாசுன் ஷனகா, ஜென்மேன் மாலன், ராஸி வான்டெர் டூசன்
  • ஆல் -ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்கா, தனஞ்சய டி சில்வா, ஜார்ஜ் லிண்டே
  • பந்து வீச்சாளர்கள் - துஷ்மந்த சமீரா, தப்ரைஸ் ஷம்ஸி, ககிசோ ரபாடா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை